Sunday, May 8, 2011

இஸ்லாமிய வங்கியியல் அரபு நாடுகளுக்கு 5 ஆண்டுகளில் 30,000 பேர் தேவை


வட்டி அடிப்படையிலான முதலாளித்துவ வங்கி இயல் நடைமுறைக்கு மாற்றாக 1965க்குப் பிறகு தொடங்கப்பட்ட வட்டியில்லா வங்கிஎன்றழைக்கப்படும் இஸ்லாமிய வங்கிகள் உலகம் முழுவதும் பெருகி வருகின்றன.
தற்போதைய பொருளாதார தேக்க நிலையில் உலகின் பெருவாரியான முதலாளித்துவ வங்கிகள் திவால் ஆகின. சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட இந்திய வங்கித் துறையும் வட்டியில்லா வங்கி இயல் வழிமுறைகளைக் கொண்ட இஸ்லாமிய வங்கிகளும் மட்டுமே தாக்குப்பிடித்து நின்றன.
குறிப்பாக இஸ்லாமிய வங்கிகள் பிற வங்கிகளைக் காட்டிலும் மிகப்பெரிய இலாபம் ஈட்டி பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. இதனால் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இஸ்லாமிய வங்கிகள் உருவாகி வருகின்றன. இதன் காரணமாக இஸ்லாமிய வங்கி இயல் படித்த பட்டதாரிகளுக்கு அரபு நாடுகளிலும் உலக அளவிலும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 30,000 பேர் தேவை என்று வங்கி இயல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
10ஆம் வகுப்பு முடித்து வணிகவியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்து B.Com, B.A.Economics, BBA, BCA, BE-IT போன்ற நிதி மற்றும் தகவல் தொடர்பு சார்ந்து பட்டம் பெறும் மாணவ/மாணவியர் இஸ்லாமிய வங்கி இயல் படிப்பை பட்டயப்படிப்பாகவோ, பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பாகவோ கூடுதலாகப் படிக்க வேண்டும்.
இளங்கலை படிக்கும் போதே அரபுமொழி அறிவு அவசியம். இஸ்லாமிய வங்கி குறித்தான தகவல்களையும் இணையதளம் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. உயர்ந்த ஊதியம் மற்றும் குடும்ப விசாவோடு அரபு நாடுகளில் பணியாற்றுவதற்கு எளிய வழி இஸ்லாமிய வங்கி இயல் படிப்பது.
நன்றி : CMN சலீம்

No comments:

Post a Comment