உலக கச்சா எண்ணெய் வளத்தில் 43 விழுக்காட்டையும் இயற்கை எரிவாயு வளத்தில் 23 விழுக்காட்டினையும் தன் வசம் வைத்து உலகப் பொருளாதாரத்தில் தனி ஆளுமை செலுத்தும் அரபு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை போன்றவற்றில் இனி வரும் காலங்களில் தங்களது முதலீடுகளை அதிகப்படுத்தி விரிவாக்க இருக்கின்றன.
கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து அதை அப்படியே ஏற்றுமதி செய்வதில் தான் அதிக கவனம் செலுத்தினர். இனி வரும் காலங்களில் உள்நாட்டிலேயே கச்சா எண்ணெயை சுத்திகரித்து பல திரவங்களாக மாற்றி, மதிப்புக்கூட்டி, விற்பனை செய்யத் திட்டமிட்டு அவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான சுத்திகரிப்பு நிலையங்களும் அது தொடர்பான தொழிற்சாலைகளும் பெருகி வருகின்றன.
தற்சமயம் உலக அளவில் பல நாடுகளிலும் எண்ணெய்வளம் கண்டறியப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் போட்டியைச் சமாளித்திட நவீனத்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற CLEANER FUELS (Compressed natural gas (CNG); Liquiefied Pertolium gas (LPG); City diesel hydrogen; alchohol fuels and battery operated vehicles) என்றழைக்கப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத எரிவாயு நகரங்களை ஏற்படுத்துவதிலும் பெரிய அளவிலான முதலீடுகள் செய்யப்படுகின்றன.
உலகிற்கு எரிசக்தி வழங்குவதில் தற்போதைய நிலையைத் தக்க வைத்துக்கொள்ளவும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொண்டு வெற்றி பெறவும் பெட்ரோலியம் மற்றும் அது சார்ந்த துறைகளில் தான் அரபு நாடுகள் தங்களின் செல்வத்தை முதலீடுகளாகக் கொட்ட இருக்கின்றன.
இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் ஏறக்குறைய 3 இலட்சம் திறன் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் இந்த பெட்ரோலியத் துறையில் மட்டும் தேவைப்படுகின்றனர் என்று அரபு நாடுகளின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்த அரிய வாய்ப்பை முஸ்லிம் சமூகம் பயன்படுத்திட இன்றே திட்டமிடுங்கள். 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் வாய்ப்பைப் பெறாதவர்கள் பெட்ரோலியத் துறை சார்ந்த அனைத்துப் படிப்புகளையும் கற்றுத்தரும் மத்திய அரசின் “பெட்ரோலிய பல்கலைக்கழகம்” டேராடூனில் உள்ளது. இந்தப் பல்கலையில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு உள்நாட்டிலேயே அபரிமிதமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன

நன்றி : CMN சலீம்
No comments:
Post a Comment